ACUPUNCTURE HOME

     2008ம் வருடம் வரை ஒரு சராசரி மனிதனாக ஆங்கில மருத்துவத்தை கடவுளாக பாவித்து வந்த எனக்கு எதிர்பாராமல் அறிமுகம் ஆனது இந்த அக்குபங்சர் மருத்துவம். ஆரம்ப காலத்தில்  அக்குபங்சர் மருத்துவம் என்பது வெறும் வலிகளை போக்கி சில நோய் அறிகுறிகளை மட்டுமே சரியாக்கும், அவ்வப்போது துணைக்கு ஆங்கில மருந்துகள், மற்றும் பல உபரி மருந்துகளும் சாப்பிட்டு நம்மை நோய்களில் இருந்து சற்று சரிசெய்து கொள்ளமுடியும் என்றே அறிந்தேன். ஆனால், அனுபவத்தில் பல நாற்பட்ட நோய்களில் இருந்து எதேச்சையாக சிலர் விடுபடுவதை உணர முடிந்தது, எனவே அக்குபங்சர் மருத்துவத்தை முறையாக கற்க பல கல்வி நிறுவனங்களை தேடி ஓடியபோது கிடைத்தது என்னவோ ஏமாற்றமும், பண விரயமுமே. இறுதியில் அமெரிக்காவில் இருந்து அக்கு கிராப் என்னும் கருவியை இறக்குமதி செய்தும் சில மாதங்கள் பயிற்சி செய்து வந்தேன். அப்போதுதான் எனக்கு "இந்திய அக்குபங்சர்" எனும் பொக்கிஷம் - கம்பம் அக்காடமி ஆப் அக்குபங்சர் மூலம் கிடைத்தது.

     அதுவரைக்கும் எனக்குள் இருந்த கேள்விகள், குழப்பங்கள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக விடை கிடைக்க தொடங்கியது. இதில் குறிப்பாக நான் உணர்ந்தது இதுதான் "உடலில் உருவாகும் நோய்களுக்கு தீர்வு உடலுக்குள்ளேயே உள்ளது, வெளியில் கருவிகளை கொண்டு தேடுவது அறியாமையே". உடலை மருந்துகளை கொண்டு ஏமாற்றி உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியாது, மாறாக உடலை காப்பதே உயிர்தான்..! உயிரை உணரத்தான் முடியும். அளவிட முடியாது...!

       இந்த புரிதல்களுடன் 2011ம் வருடம் முதல் RK அக்குபங்சர் இல்லம் என்ற பெயரில் நடந்து வந்த நமது மரபுமுறை அக்குபங்சர் சிகிச்சைமையம், 2014ம் ஆண்டில் இருந்து அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் மூலம் நடத்தப்பட்டுவரும்  அக்குபங்சர் இல்லங்களுடன் இணைந்து  ஈரோடு மற்றும் விஜயமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. 

     எங்கள் அக்குபங்சர் இல்லத்தின் முக்கிய குறிக்கோள்கள் மக்களுக்கு நோய்களின் மேல் உள்ள பயத்தை போக்கி, மருந்துகளை முழுமையாக தவிர்த்து, உணர்வுகளின் அடிப்படையில் (கருவி சாராத), பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவத்தை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்பதும், அனைத்து நோய்களில் இருந்தும் அனைவரும் முழுமையாக குணமடைய வேண்டும் என்பதுமே ஆகும். 

இந்திய அக்குபங்சரின் தனிச்சிறப்புகள்:


 நாடி அடிப்படியிலான சிகிச்சை என்பதால் நோய் அறிகுறிகளை கூறத் தேவையில்லை.

 வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கத் தேவையில்லை.

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான மருத்துவம்.

 எக்ஸ்ரே, ஸ்கேன் உட்பட எந்த லேப் ரிப்போர்ட்டுகளும் தேவையில்லை.

 ஊசி, மருந்து, மாத்திரை, பத்தியம், பக்கவிளைவுகள் இல்லை. 


     இந்த தலைமுறைக்கு மருந்துகள் இல்லாத மருத்துவத்தை கொடுத்தால்; அடுத்த தலைமுறை மருத்துவமே தேவையில்லாத ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகும், என்ற கனவுடன் பயணிக்கும் எங்களுடன் கைகோர்த்துக் கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


என்றும் அன்புடன்,

அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்

முகநூலின் தொடற


மருத்துவ கட்டுரைகள்

வீடியோக்கள்


புத்தகங்கள்